வில்லியனுார்: வில்லியனுார் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவிலில் திருப்புகழ் பாராயணம் நேற்று நடந்தது.
வில்லியனுார் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கே உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவிலில் புரட்டாசி கிருத்திகையை முன்னிட்டு சென்னை திருமுருகன் திருப்புகழ் பாராயண குழுவினர் நேற்று காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரையில் 108 முறை திருப்புகழ் பாராயணம் நடந்தது.மேலும் காலை 10:30 மணியளவில் சிறப்பு அபிஷேகமும், 11:30 மணியளவில் அன்னதானமும் நடந்தது. இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் பால சுப்பரமணியன் தலைமையில் அறங்காவலர் குழுவினர் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.