108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ரெங்கநாதர் கோயிலில் இன்று முதல் துலா உற்சவம் துவங்கியது, இதனையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து தங்ககுடம் எடுத்துவந்து, அம்மா மண்டபம் புனித திருக்காவிரியிலிருந்து திருமஞ்சனம்(புனிதநீர்) கோவில் யானை ஆண்டாள் மீது ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு நம்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
சூரியன் ராசி மண்டலத்தில் துலாம் ராசியில் பிரவேசிப்பது துலாம் மாதம் எனபப்டுகிறது, ஐப்பசி மாதம் சூரியன் பிரவேசிக்கும் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த ஆண்டு துலாம் மாதம் பஞ்சாங்கப்படி இன்று துவங்கியதால் கோவில் யாணை ஆண்டாள் மீது தங்ககுடத்தில் மற்றும் வெள்ளி குடங்களில் புனிதநீர் எடுத்துவந்து ஐப்பசி மாதம் முழுவதும் ஸ்ரீரங்கநாதருக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. கங்கையில் புனிதமான காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும் மற்றும் நமக்கும் நமது குடும்பத்தில் நன்மைகள் வந்துசேரும் என்பதால் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் திரண்ட ஏராளமான பக்தர்கள் புண்ணிய நதியம் காவிரி ஆற்றில் புனிதநீராடி நம்பெருமாளை வழிபட்டனர். காவிரியில் தண்ணீர்வரத்து சற்று அதிகமாக உள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.