Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இவரை வணங்கினால் மரண பயம்  நீங்கும்! இவரை வணங்கினால் மரண பயம் நீங்கும்! சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
பிரம்மபுத்ரா புஷ்கரம் நவ.,05ல் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
15:03

புஷ்கரத் திருவிழா என்பது ஒவ்வொரு வருடமும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து  இன்னொரு ராசிக்கு இடம்பெயரும் பொழுது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழாவாகும். சிருஷ்டியில் இருக்கும் மூன்றரைக்கோடி தீர்த்தங்களுக்கும் அதிபதி பிரம்மா.  அவற்றினுள் ஒருசில தீர்த்தங்களுக்கு நம் புராணங்கள், புஷ்கர விசேஷத்தை  நிர்வகித்துள்ளன. 

பிரம்மாவின் கமண்டலத்திலுள்ள புஷ்கரமான குரு பகவான். குரு பெயர்ச்சி சமய ங்களில் அந்தந்த ராசிக்குரிய தீர்த்தங்களில் பன்னிரெண்டு நாட்கள் பிரவேசம் செய்து,  வாசம் செய்வதாக ஐதீகம். இந்த புஷ்கர புண்ணிய காலத்தில் மும்மூர்த்திகளும், தேவர்களும், ரிஷிகளும் அந்தந்த தீர்த்தங்களுக்கு வந்து நீராடி மகிழ்வதாகவும் நம்பப் படுகின்றது. எனவே, இந்த புஷ்கர காலங்களில் அதற்குரிய நதிகளில் நீராடுவது மூன்றரை கோடி தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியத்துக்கு நிகரானது. அப்படி நீராடி  தானம் செய்வது மற்ற நாட்களில் செய்யும் தானங்களைவிடப் பன்மடங்கு புண்ணிய த்தை அளிக்கும்.

அந்த வகையில் இந்த முறை குருபெயர்ச்சியையொட்டி, புஷ்கர விழாவானது அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள பிரம்மபுத்ரா நதியில் கொண்டாடப்பட உள்ளது.  மிகவும் பிரசித்தி பெற்ற 51 சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா கோயில் இங்குதான் உள்ளது. புஷ்கர காலங்களில் வரையறுக்கப்பட்ட நதிகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து முன்னோர்களை வழிபடுவது பித்ரு சாபம் நீங்க வழி வகுக்கும். கவுரி பூஜை,  கங்கா பூஜை, பிரகஸ்பதி பூஜை, தம்பதி பூஜை செய்வதும் வாழ்வில் சகல நன்மைகளும்  கிடைக்க வழி வகுக்கும். வரும் நவம்பர் 5 அன்று திருக்கணித பஞ்சாங்கப் படி குரு பகவான் விருச்சிக ராசியில்  இருந்து தனுர் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதனால் தனுர் ராசிக்குரிய நதியான, பிரம்மபுத்ரா என்கிற புஷ்கர வாஹினி நதியில் இந்த முறை புஷ்கர விழா கொண்டாட ப்பட இருக்கிறது. இந்நதியில் நவம்பர் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை குருபகவான்  வாசம் செய்வார். குரு பெயர்ச்சி தொடங்கி இந்த 12 நாட்களும் ஆதி புஷ்கரம் என்று  கொண்டாடப்படுகின்றது.

சில சுலோகங்களில் தனுர் ராசிக்குரிய நதியாக சிந்து மற்றும் பிரம்மபுத்ரா என்று குறிப் பிட்டுள்ளது. ஆனால், சிந்து நதியின் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் (அதுவும்  12,000 அடி உயரத்தில்) அமைந்துள்ளதாலும் பக்தர்கள் நீராட பருவ நிலை ஏதுவாய்  இல்லாத காரணத்தினாலும், பிரம்மபுத்ராவில் மட்டும் இம்முறை புஷ்கர விழா  நடைபெற உள்ளது. பாரத தேசத்தில் தொன்றுதொட்டு விளங்கும் புண்ணிய நதிகளில் ஒன்று பிரம்மபுத்ரா,  இந்த நதி ஆசியாவில் இருக்கும் பெரிய நதிகளில் ஒன்று. கயிலாய மலையில் பிறந்து,  திபெத்தில் இமாலய பள்ளத்தாக்குகளில் தவழ்ந்து அஸ்ஸாமில் புஷ்கர வாஹினி என்ற  நாமத்துடன் நுழைகிறது. திப்ருகரில் இரண்டாகப் பிரிந்து, பின்னர் 100 கிலோ மீட்டர்  தொலைவுக்கு அப்பால் இணைகிறது. பின்னர், கங்கையின் கிளை நதியான பத்மாவுடன்  இணைந்து பின்னர் மிகப்பெரிய கழிமுகத்தை பங்களாதேஷில் ஏற்படுத்தி வங்காள  விரிகுடாவில் சங்கமிக்கிறது.

புராணம்: பிரம்மாவுக்கும் அமோகா என்ற தேவ கன்னிகைக்கும் நீர் வடிவில் பிறந்தவர்  பிரம்மபுத்திரர். அமோகா தேவலோகம் திரும்பிவிட, சாந்தனு முனிவர் நான்கு  மலைகளுக்கு இடையில் அந்த புத்திரனை வளர்த்து வரலானார். அதுவே மிகப்பெரிய  ஏரியாக, பிரம்மகுண்டம் என்று விளங்கி வந்தது. பிரம்மாவின் புதல்வனாக நீர் வடிவில்  பிறந்து வளர்ந்து, பிரம்மாண்ட நதியாய் பிரவகித்ததால் பிரம்மபுத்ரா என்று அழைக்க ப்பட்டது.

பரசுராமரும் பிரம்மபுத்ராவும்: மஹாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர், தந்தை சொல் கேட்டு தனது அன்னையைக் கொன்றதால் அவருடைய கோடரியும் அவர்  கையுடனேயே ஒட்டிக் கொண்டது. அதே கையுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட  பரசுராமர் இந்த பிரம்ம குண்டத்துக்கு வந்து தவம் செய்ததாகப் புராண செய்தி. அங்கு  வசித்து வந்த மக்களுக்கு நீர் அளிக்கும் பொருட்டு தன் கையில் ஒட்டிக் கொண்டிருந்த  கோடரியால் கரையாக இருந்த ஒரு மலையை வெட்ட, ஏரியில் இருந்து ஒரு புது நதி பிரவகித்தது.

பரசுராமரின் சாப விமோசனத்துக்கும் இந்த நதி காரணமாக அமைந்தது. மலையைப் பிளந்து நதி பிரவகிக்கும்போது கோடரியும் பரசுராமர் கையில் இருந்து பிரிந்தது. அதன்  மேல் இருந்த ரத்தமும் நீரில் கரைந்து நீர் சிவப்பானதால் இன்றும் அநேக இடங்களில்  செந்நிற நீரே அந்நதியில் பிரவகிக்கின்றது.

பிரம்மபுத்ராவை சீர் செய்த பலராமர்:
கிருஷ்ணனின் தமையனான பலராமர் நிறைய  அந்தணர்களை கொன்ற பாவம் தொலைய இந்த பிரம்மகுண்டம் வந்து தவம் செய்து,  சுற்றி இருந்த நிலங்களை சீர் செய்து, நதி லகுவாகப் பாய்ந்து செல்ல வழி செய்ததாகப்  புராணம் சொல்கிறது. இன்னொரு உப நதியான தானேஸ்வரியுடன் சேர வழி செய்தார்  எனவும் வழக்கில் உண்டு. இந்த சங்கமத்தில் நீராடுவது ஏனைய சங்கமங்களில் நீராடுவதை விட பன்மடங்கு புண்ணியம் கிடைக்க வகை செய்யும்.

சிவந்த நீருக்குக் காரணம் கிருஷ்ண - சிவாயுத்தம்: அஸ்ஸாமில் உள்ள தேஜ்பூர் என்ற  இடத்தில் நதி ரத்த சிவப்பாய் காணப்படுவதற்கு ஒரு புராணம் உள்ளது. பிரகலாதனின்  வம்சத்தில் வந்த பாணாசுரன் தன் புதல்வி உஷா, கிருஷ்ணனின் புதல்வனான அனிரு த்தை மணம் புரிய விழைந்ததை விரும்பவில்லை. அதனால் அவன் சிவனின் உதவியை  நாட, அதன் விளைவாய் இங்கு ஏற்பட்ட கிருஷ்ணா - சிவன் யுத்தத்தின் விளைவாய்  ஏராளமான ரத்தம் பூமியில் உறைந்ததால் அந்த பூமியே சிவப்பானதாக கூறப்படுகிறது.

இணையாத பிரம்மபுத்ராவும் கங்கையும்: ஆண் நதியான பிரம்மபுத்ரா, பெண் நதியான  கங்கையை மணம் முடிக்க விரும்பியபோது, அவனுடைய அன்பை சோதிக்க ஒரு வய தான பெண் போன்ற கோலத்தில் கங்கை காட்சி அளித்தாளாம். உடனே, பிரம்மபுத்ரா  அவளை அடையாளம் கண்டு கொள்ளாத காரணத்தினால் கோபம் கொண்டு கங்கை  அவனை மணம் முடிக்க விரும்பவில்லை எனவும், பின்னர் பிரம்மபுத்ரா, கங்கையின்  கிளை நதியான பத்மாவுடன் சேர்ந்ததாகவும் ஐதீகம்.

சமீப காலத்திய ஏனைய புஷ்கர விழாக்கள்: கடந்த 2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம்  கோதாவரியிலும், 2016 ஆம் ஆண்டு கிருஷ்ணாவிலும், 2017ல் காவிரி நதியிலும்,  2018ல் தாமிரபரணியிலும் புஷ்கர விழா நடைபெற்றது.

சித்தாந்த ஸரளி ஸிக்ரந்தம், ஸ்கந்த புராணம் மற்றும் நாரத புராணத்தில் குரு பெய ர்ச்சியின்போது எந்த ராசிக்கு எந்த நதியில் புஷ்கரம் நிகழ்கிறது என்பதைக் குறிக்கும்  ஸ்லோகம்.

மேக்ஷேச கங்கா
வருபேக்ஷ ரேவா
மிதுனேது சரஸ்வதி
கர்கடே யமுனா ப்ரோக்தா
சிம்மே கோதாவரி ஸ்மிருதா
கன்யாயாம் கிருஷ்ணவேணிசா
காவேரி தடகே ஸ்மிருதா
விருச்சிகே தாமிரபரணி சா
சாபே புஷ்கரவாஹினி
மகரே துங்கபத்ரா
கும்பே சிந்து நதி ஸ்மிருதா
மீனே பரணீதா நதிசா
குரோ சங்கர மனோஸ்மிருதா
புஷ்கராக்சோ முனிநாம் ஹி
ப்ரவேசோ உத்ர பூதே ஸ்மிருதாஹ

நாள்    தேவதை        தானங்கள்

நவம்பர் 5    மித்ரன்    தங்கம், வெள்ளி, தானியம், பூமி
நவம்பர் 6    அர்யமா    வஸ்திரம், உப்பு, பசு, ரத்தினம்
நவம்பர் 7    திவஸ்தா    வெல்லம், கறிகாய்கள், குதிரை, பழங்கள், வண்டி
நவம்பர் 8    சூரியன்    நெய், எண்ணெய், தேன், பால்
நவம்பர் 9    விலஸ்வான்    தான்ய, வண்டி, எருமை, காளை, ஹலம்
நவம்பர் 10    அருணா       மருந்து, கற்பூரம், கஸ்தூரி, சந்தனம்,   வாசனை திரவியம்
நவம்பர் 11     பகவான்    வீடு, பீடம், படுக்கை, நாற்காலி, கிழங்கு, இஞ்சி
நவம்பர் 12    அம்சுமான்    சந்தனக்கட்டை, புஷ்பம், முறம்
நவம்பர் 13    இந்திரன்    சிராத்தபிண்டம், கன்னி, சவுபாக்கியத்ரவ்யம், மஞ்சள், கங்கணம்
நவம்பர் 14    பர்ஜன்யன்    சாளக்ராமம், புத்தகங்கள்
நவம்பர் 15    விஷ்ணு    யானை, குதிரை
நவம்பர் 16    பிரம்மா    எள், புத்தகங்கள், பேனா, பென்சில்

எந்த ராசிக்கு என்ன நதி?

வேதங்களின்படி குரு பெயர்ச்சி தொடங்கி முதல் 12 நாட்களிலும், அடுத்த குரு பெயர்ச்சிக்கு முன் கடைசி 12 நாட்களிலும், குரு பகவான் அந்தந்த ராசிக்குரிய புஷ்கார  நதிகளில் வாசம் செய்வதாக ஐதீகம். ஏனைய நாட்களில் பகல் 12 மணியிலிருந்து 1 மணி  வரை வாசம் செய்வதாக சாஸ்திரம்.

மேஷம்    - கங்கை
ரிஷபம்    - நர்மதா
மிதுனம்    - சரஸ்வதி
கடகம்    - யமுனா
சிம்மம்    - கோதாவரி
கன்னி    - கிருஷ்ணா
துலாம்    - காவிரி
விருச்சிகம்    - தாமிரபரணி
தனுசு    - பிரம்மபுத்ரா
மகரம்    - துங்கபத்ரா
கும்பம்    - சிந்து
மீனம்    - பரணீதா.

 
மேலும் துளிகள் »
temple
ராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. ... மேலும்
 
temple
தமிழகத்தில் கிரிவலம் பிரபலமாக இருப்பது போல மத்திய பிரதேசத்தில் நர்மதை நதிவலம் பிரபலம். 1300 கி.மீ., தூரம் ... மேலும்
 
temple
வியாழக்கிழமை என்றாலே  தட்சிணாமூர்த்தி சன்னதியில் கூட்டம் அலைமோதுகிறது. குருவுக்குப் பரிகாரம் ... மேலும்
 
temple
ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி
ஓம் அன்பர்க்கு உதவுபவனே போற்றி
ஓம் அநுகூலனே போற்றி
ஓம் ... மேலும்
 
temple
காசியில் இருக்கும் அன்னபூரணி அன்னம் அளிக்கும் தாயாக திகழ்கிறாள். கையில் பால் சோறு நிறைந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.