மேல்மலையனூர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 28 லட்சம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2012 11:04
அவலூர்பேட்டை : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 28 லட்சம் ரூபாய் உண்டியல் பணம் வசூலானது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் அறநிலைய துறை உதவி கமிஷனர்கள் ஜோதி, பரணி தரன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் 27 லட்சத்து 91 ஆயிரத்து 478 ரூபாய் ரொக்கமும், 298 கிராம் தங்க நகைகள் மற்றும் 357 கிராம் வெள்ளி நகைகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது. இப்பணியில் கோவில் மேலாளர் முனியப்பன், ஆய்வாளர் முருகேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.