பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது செட்டிகுளம், இவ்வூரில் அற்புதச் சிற்பங்களுடன் கூடிய தூண்கள், மண்டபங்கள், விசாலமான பிராகாரம், என அற்புதமாக அமைந் துள்ளது. ஏகாம்பரேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனியே (கோயிலின் பல இடங்களில்) தமக்கேயுரிய மீன் வாகனத்தில் அமர்ந்து அற்புதமாகக் காட்சி தருகின்றனர் 12 குபேரர்கள். அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த குபேரனுக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால், செல்வம் பெருகும்; தொழிலில் விருத்தி ஏற்படும்; வீடு - மனை வாங்கி செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம்.
அவரவரின் நட்சத்திர நாளில் வந்து வழிபடுவது இன்னும் விசேஷம் என்கின்றனர் பக்தர்கள். பன்னிரு குபேரர்கள் மட்டுமின்றி, இங்கே மகாகுபேரரையும் தரிசிக்கலாம். திருச்சி -சென்னை சாலையில், திருச்சியிலிருந்து சுமார் 44 கி.மீ. தொலைவிலும் பெரம்பலூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஆலத்தூர் கேட், இங்கேயுள்ள கோயில் நுழைவாயில் வளைவில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு பயணித்தால், செட்டிக்குளத்தையும் கோயிலையும் அடையலாம்.