கடலில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனின் செருப்பு காணாமல் போய் விட்டது. உடனே அவன் கடற்கரையில் இந்தக் கடல் மாபெரும் திருடன்! என்று எழுதினான். சிறிது தூரத்தில் ஒருவர் தான் எதிர்பார்த்ததைவிட அதிகம் மீன் கிடைத்ததால், இக்கடல் பெரும் கொடையாளி! என்று எழுதினார். அதே கடலில் ஒருவன் நீந்தச்சென்று மூழ்கிவிட்டான். அவன்மீது அதிகப்ரியம் கொண்டிருந்த தாய், இக்கடல் மிகக் கொடூரமான கொலையாளி! என்று எழுதினாள். வயது முதிர்ந்த ஒருவர் கடலுக்குள் சென்று முத்துகளைக் கொண்டுவந்தார். அவர் மகிழ்ச்சியோடு, இந்தக் கடல் ஒன்றே போதும், நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடிருக்க என்று எழுதினார். பின்னர் ஒரு பெரும் அலை வந்து, இவர்கள் அனைவரும் எழுதியதை அழித்துவிட்டுச் சென்றது. மனிதர்களின் எண்ணங்களும், வாழ்க்கைக் கண்ணோட்டமும் அவரவர் பார்க்கும்விதத்தில்தான் அமைகின்றன.