ஒரு நாள் மன்னர் ஒருவர் தன் மகனுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அங்கு ஓரிடத்தில் பெரிய யானைகள் கயிற்றாலும், குட்டி யானைகள் இரும்புச் சங்கிலியாலும் கட்டப்பட்டிருந்தன. இதுபற்றி அங்கிருந்த பாகனிடம் விவரம் கேட்டார் மன்னர். அதற்குப் பாகன், “மன்னர்! பெரிய யானைகள் குட்டியாக இருக்கும் போது இரும்புச் சங்கிலியால்தான் கட்டப்பட்டிருந்தன. நாளாக நாளாக தங்களால் இந்தத் தளையிலிருந்து விடுபடமுடியாது என்று முடிவுக்கு வந்து நம்பிக்கையை இழந்துவிட்டன. ஆகவே தான் பெரிய யானைகளைக் கயிற்றாலும், குட்டிகளை இரும்புச் சங்கிலியாலும் கட்டியுள்ளேன்” என்றான்.