திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள பலிபீடம், ஸ்வாமி சன்னிதிக்கு நேர்க்கோட்டில் இல்லாமல் விலகி இருக்கும், என்ன காரணம்? முற்காலத்தில், இந்தப் பகுதியில் வசித்த பால்காரர் ஒருவர், தினமும் அரண்மனைக்குப் பால் வழங்கி வந்தார். இந்தப் பால், திருநள்ளாறு கோயிலின் நித்திய பூஜைக்குக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், பொய்க் கணக்கு எழுதுவதில் வல்லவரான அரண்மனைக் கணக்கர், பாலைத் தனது வீட்டில் கொடுத்து விடும்படியும், அதற்கான பணத்தைக் கோயில் கணக்கில் பெற்றுக் கொள்ளும் படியும் வற்புறுத்தினார். பால்காரர் மறுக்கவே, பொய் குற்றச்சாட்டு கூறி அரச தண்டனைக்கு ஆளாக்கி விடுவேன்!” என மிரட்டினார் கணக்கர். இந்த இக்கட்டில் இருந்து காக்கும்படி தர்ப்பாரண்யேஸ்வரரை வேண்டிக் கொண்டார் பால்காரர். அதற்கு செவி சாய்த்த ஈசன், கர்ப்பக்கிரகத்தில் இருந்தவாறே... கணக்கரின் தலையைக் கொய்து வரும்படி தனது சூலாயுதத்தை ஏவினார். அப்போது சூலத்துக்குத் தடை ஏற்படாதவாறு சற்று விலகி வழி விட்டதாம் பலிபீடம்.