பொங்கல் முதல் திருமலையில் பிளாஸ்டிக்குக்கு முழு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2019 11:10
திருப்பதி: திருமலையில் பொங்கல் திருநாள் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது.
திருமலையில் பொங்கல் பண்டிகை முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க தேவஸ்தானம் முடிவெடுத்து உள்ளது. பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளையும் பிளாஸ்டிக் கவர்களில் இல்லாமல் மாற்று பைகளில் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி நகரில் 10 கி.மீ. தொலைவிற்கு மது விலக்கு அமல்படுத்த வேண்டும் என்று ஆந்திர அரசிற்கு தேவஸ்தானம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.