பதிவு செய்த நாள்
25
அக்
2019
01:10
ஈரோடு: கோபி அருகே, வெள்ளாங்கோவில் பல்லி மாரியம்மன் கோவிலில், வரும், 30ல் பொங்கல் வைபவம் நடக்கிறது. விழாவையொட்டி, 29ல் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், அலங்கார பூஜை, திருவீதி உலா நடக்கிறது. 30ல் அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு பூஜை, பொங்கல் வைபவம், 5:00 மணிக்கு சிறப்பு பூஜை, 6:00 மணிக்கு கிடாய் வெட்டுதல் நடக்கிறது. 31ம் தேதி இரவு, மஞ்சள் நீராட்டு விழா, நவ.,1ல் மறுபூஜை நடக்கவுள்ளது. பரம்பரை அறங்காவலர் துரைசாமி, குழு தலைவர் செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள், விழா ஏற்பாடுகளை செய்கின்றனர்.