அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று சாமி கும்பிட்டனர். விருதுநகர் ரோட்டில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில், பக்தர்கள் ‘சுவீட்’ கொடுத்து அம்மனை வழிப்பட்டனர். பக்தர்கள் வழங்கிய இனிப்புகளை கொண்டு அம்மனை அலங்காரம் செய்தனர். அருப்புக்கோட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன், மீனாட்சி சொக்கநாதர், படித்துறை விநாயகர், அரசமரத்து விநாயகர் கோயில்களில் பக்தர்கள் வழிப்பட்டனர்.