பதிவு செய்த நாள்
28
அக்
2019
11:10
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல்லில், 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்நேயர் ஜெயந்தி, தமிழ்மாத முதல் ஞாயிறு, தை பொங்கல், தீபாவளி உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம், தங்ககவசம், வெள்ளிக்கவசம், வடைமாலை சாத்துப்படி, முத்தங்கி, வெண்ணைக்காப்பு, சந்தனகாப்பு அலங்காரம் உள்ளிட்டவை செய்யப்படும். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பக்தர் ஒருவர், ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளை கொண்டு, ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்வதற்கு முன்வந்தார். அதை தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பூக்கட்டும் தொழிலாளர் நரசிம்மன் தலைமையில், 15க்கம் மேற்பட்டவர்கள், நேற்று முன்தினம் முதல் வெற்றிலை கோர்க்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை, 8:00 மணிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்டவைகளால் அபி ?ஷகம் செய்யப்பட்டு, சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.