திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று(அக்.28) கந்த சஷ்டி திருவிழா துவங்குகிறது. இதற்காக கோயிலில் தங்கி விரதமிருக்கும் பக்தர்கள் நேற்று தீபாவளி கொண்டாடியவுடன் கோயில் மண்டபங்களில் இடம் பிடிக்க வந்தனர். இவர்கள் திருவிழா நடக்கும் ஆறு நாட்களும் தங்கி விரதமிருப்பர். நேற்று போட்டி போட்டு சாக்பீஸால் குறியீடு செய்தும், போர்வை விரித்தும் இடங்களை ‘ரிசர்வ்’ செய்தனர். இன்று காலை 9:30 மணிக்கு விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும்.