பதிவு செய்த நாள்
28
அக்
2019
01:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தீபாவளி பண்டிகையை பொதுமக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். காலை முதல் பட்டாசு வெடித்தும், அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும்; ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டும் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கோவில்களில் வழிபாடுபொள்ளாச்சி கடைவீதி பாலகணேசர் கோவிலில், தீபாவளியையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விநாயகப்பெருமான் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், லட்சுமி குபேர பூஜை நடந்தது. ஒன்பது வகையான அபிஷேகமும், ஒன்பது வகை பூக்களால் அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து லட்சுமி குபேர பூஜையும் நடந்தது.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிவபெருமான் தங்க கவச அலங்காரத்திலும், அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், லட்சுமி குபேர பூஜை நடந்தது. பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில் வழிபாடு நடந்தது.