பதிவு செய்த நாள்
28
அக்
2019
01:10
உடுமலை:உடுமலை சக்தி விநாயகர் கோவிலில், ஐம்பெரும் விழாவையொட்டி, சிறப்பு ேஹாமங்கள் நேற்று நடந்தது.உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட்டில், சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், லட்சுமி குபேர பூஜை, அன்னபூரணி அம்மனுக்கு லட்டு தேர் அலங்கார பூஜை, குருபகவான் பெயர்ச்சி, சுப்பிரமணியருக்கு ஸ்கந்த சஷ்டி விரதம், திருக்கல்யாணம் என ஐம்பெரும் விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி நேற்று மாலை, விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்ணியார்ச்சனை, ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை மற்றும் ேஹாமம் நடந்தது.தொடர்ந்து, அன்னபூரணி அம்மனுக்கு, கலசாபிஷேகம், பால் அபிஷேகம், லட்டு அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, மதியம், 2:00 மணிக்கு, குருப்பெயர்ச்சி விழா கோவிலில் துவங்குகிறது. இதையொட்டி, பல்வேறு சிறப்பு ேஹாமங்களும் நடத்தப்படுகிறது.மாலை, 5:00 மணிக்கு, வள்ளி, தேவசனோ சமேத சுப்பிரமணியருக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.