பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
தேனி: தேனி அரண்மனைப்புதுார், வேதபுரீதட்சிணாமூர்த்தி வித்யாபீடத்தில்,நாளை (அக்., 29,) அதிகாலை 3:49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு குருபகவான் மாற உள்ளார். அதனை முன்னிட்டு அக்., 28 மாலை 6:30 முதல் 8:00 மணி வரை மஹாகணபதி ஹோமம், ஸ்ரீநவக்ரஹ ஹோமம், நடக்க உள்ளது.
அக்., 29ல் அதிகாலை 4:30 முதல் 6:00 மணி வரை குருபகவான் சிறப்பு ஹோமங்களும், 6:00 மணி முதல் 7:45 மணி வரை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் நடக்க உள்ளன. பின்னர் புஷ்பாஞ்சலியும், 8:00 மணிக்கு ஒரே நேரத்தில் ஆதிகுருவிற்கும், தேவகுருவிற்கும் மஹா தீபாரதனையும், 9:30 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை வழிபாடு துவங்க உள்ளது.
லட்சார்ச்சனை சங்கல்ப காணிக்கை ரூ.300. விசேஷ ஹோமம் அர்ச்சனை சங்கல்ப காணி க்கை ரூ.300. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, லட்சார்ச்சனை நடக்க உள்ளது. மேலும் விபர ங்களுக்கும், லட்சார்ச்சனை முன்பதிவுக்கும் 96004 49031 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என, ஸ்ரீதட்சிணாமூர்த்தி சேவா ஷமிதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.