பதிவு செய்த நாள்
12
ஏப்
2012
11:04
மதுரை: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாளை(ஏப்.,13) மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கிளி மற்றும் தங்கக்கவச சாத்துப்படி நடக்கிறது. சுவாமி சுந்தரேஸ்வரருக்கு வைரநெற்றிப்பட்டை சாத்தப்படுகிறது. காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் சாத்துப்படி இருக்கும். ரூ.1 லட்சம் செலவில், அம்மன், சுவாமி சன்னதிகளில் மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும் என நிர்வாக அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார்.
கோயில் நிர்வாகம் அறிவிப்பு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் அறிக்கை : சித்திரைத் திருவிழா ஏப்.,23 முதல் மேதூக்4 வரை நடக்கிறது. இந்நாட்களில் மீனாட்சி,சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை ,இரவு,மாசிவீதிகள், குறிப்பிட்ட வீதிகளில் உலா வருவர். எனவே,மதுரை விட்டவாசல்,அ ம்மன் சன்னதி தெரு,மாசி வீதிகளில் சுவாமி வாகன ங்கள் தட்டாதவாறு,பந்தல், தோரணம் அமைத்துக் கொள்ள வேண்டும் . மேலும்,பக்த ர்களால் சுவாமிக்கு சாத்துப்படி செய்ய கேந்திரப்பூ, மருதைவேர்கள் வைத்துக் கட்டப்பட்ட மாலைகளை சாத்துப்படிக்கு கொடுக்க வேண்டாம். கள்ளழகர் ,கோ யிலுக்கு திரும்பும் மே 10 வரை,கோ யில் சார்பாக வோ,உ பயதாரர்கள் சார்பாகவோ,மீனாட்சி அம்மனுக்கு தங்கக்கவசம் ,வைரகீரிட ம் சாத்து ப்படி, உபய திருக்கல்யாணம்,தங்கரத உலா நடத்த ப்படமாட்டாது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.