புவனகிரி சுந்தரேஸ்வர் கோவிலில் குருபெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2019 03:10
புவனகிரி: புவனகிரி ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் நடந்த குருபெயர்ச்சி சிறப்பு மகா அபிஷேகத்தில் பரிகார ராசியினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
கீழ்புவனகிரி மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் தென்முகக் கடவுளான தட்சினாமூர்த்தியை பக்தர்கள் வியாழன்தோறும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் ஆண்டு தோறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் கோவிலில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு குருபகவான் விருச்சிகராசியில் இருந்து தனுர் ராசிக்கு பிரவேசித்ததை முன்னிட்டு இன்று 29ம் தேதி காலை 7.30 மணிக்கு மகாஹோமமும், காலை 9.00 மணிக்கு மகாஅபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு மகாதீபாரதனையும் நடந்தது. இதில் பரிகார ராசியினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரினம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீவள்ளியம்பலம் அறக்கட்டளை மற்றும் கோவில் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.