பதிவு செய்த நாள்
29
அக்
2019
03:10
கோவை:ஈச்சனாரியில் உள்ள திருச்செந்தில் கோட்டம் கச்சியப்பர் மடாலயத்தில், கந்த சஷ்டி விழா, நேற்று 28ல், காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.மாநகராட்சி முன்னாள் உதவி கமிஷனர் சேதுராமன் தலைமை வகித்தார்.
கோவில் தலைமை அறங்காவலர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார்.இன்று 29ல், காலை, 7:00 மணிக்கு, கார்த்திகை பெண்கள் வழிபாடு, செவ்வாய் பிரீத்தி வேள்வி நடக்கிறது. நவ., 1ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, நவ., 2ம் தேதி காலை, 6:00 மணிக்கு, சத்ரு சம்ஹார யாகம், மாலை, 4:00 மணிக்கு, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கின்றன.நவ., 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு, வள்ளி தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், மதியம், அன்னதானம், நவ., 4ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மறுபூஜையுடன், விழா நிறைவடைகிறது.