பதிவு செய்த நாள்
30
அக்
2019
01:10
விருதுநகர் : விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோயில், சிவன் கோயில், வாலசுப்பிரமணியசாமி கோயில் உட்பட மாவட்டத்தில் பெரும்பாலான கோயில்களில் குருபெயர்ச்சியை யொட்டி ஹோமம் வளர்த்து, சிறப்பு தீபாராதனை, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
குருபகவானுக்கு பால் ,தயிர்,சந்தனம்,விபூதி,இளநீர் போன்ற 21 அபிஷேகங்கம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.ராஜபாளையம்:ராஜபாளையம் மாயூரநாதசுவாமி திருக்கோயிலில் அதிகாலை 12.50 மணி முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம் சொக்கர் கோயிலில் அதிகாலை 4 :00மணி முதல் நடைபெற்ற சிறப்பு யாக சாலை பூஜை பகல் வரை தொடர்ந்தது. தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் குரு பெயர்ச்சியை முன்னிட்டுசிறப்பு பூஜைகள் நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்துார்ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:30 மணிக்குகோயில் நடை திறக்கப்பட்டு தட்சிணாமூர்த்தி , நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, பூஜைகளை ரகு பட்டர் நடத்தினார். அதிகாலை முதல் மதியம் 1 :00மணி வரை 3 ஆயிரம் பக்தர்கள் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வணங்கினர்.