பதிவு செய்த நாள்
30
அக்
2019
01:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், குருப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், குருப்பெயர்ச்சி மகா யாகம் நடந்தது. விழாவையொட்டி விநாயகர் பூஜை புண்யாகம், கலச ஆவாகனம், கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், திரவியாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையும் நடந்தது.பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், குருபகவானுக்கு கலச பூஜை, அர்ச்சனை, தீபாராதனை, ேஹாமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.பொள்ளாச்சி ஜோதிலிங்கேஸ்வரர் அறக்கட்டளை சார்பில், மகா குருப்பெயர்ச்சி விழா, ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி ேஹாம அபிஷேக பூஜைகள் நடந்தது.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் நடந்த விழாவில், குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி., காலனி விஸ்வகர்ம காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு ேஹாம பூஜைகள், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது.ஆனைமலை விசாலாட்சி உடனமர் ஈஸ்வர சுவாமி கோவிலில் விக்னேஸ்வர பூஜை, கலச பூஜைகள், யாக வேள்விகள், அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பரிகார ராசிக்காரர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழாவையொட்டி நேற்று மாலை, சிறப்பு குரு பெயர்ச்சி பரிகார ேஹாமம், அபிஷேக ஆராதனை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நேற்று முன் தினம் முதல் கால வேள்வி வழிபாடு நடந்தது. பின், குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நேற்று அதிகாலை, 3:49 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார்.அதிகாலை 4:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி வழிபாடு நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக பூஜையில், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், எலுமிச்சை போன்றவைகளால் அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று புண்ணியாகவாசனம், விக்னஷே்வரபூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரகம், பார்வதி, சந்தானகோபாலகிருஷ்ணன் ஹோமங்கள் நடந்தது.அதன்பின், குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடந்தது.