திருநெல்வேலி: திருநெல்வேலியில் தாமிரபரணி புஷ்கர நிறைவு விழா இன்று துவங்கி நவ.6 வரை நடக்கிறது. தாமிரபரணியில் 2018 அக். 11 முதல் 23 வரை மகாபுஷ்கர விழா நடந்தது. தாமிரபரணி நதி துவங்கும் பாபநாசம் முதல் கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை பல படித்துறைகளில் ஆராதனைகள் நடந்தன.
அதன் ஒரு ஆண்டு நிறைவு விழா இன்று துவங்குகிறது. இதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான சுவாமி, செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாசர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விஜயேந்திரர் நேற்று மாலை திருநெல்வேலி வந்தார். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தாறில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கயத்தாறு அகிலாண்ட நாயகி கோதண்ட ராமேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தார். நாகலாபுரத்தில் கோசாலையை பார்வையிட்டார். நேற்று இரவு திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதுார் சென்றார். இன்று முதல் நவ.6 வரை சந்திர மவுலீஸ்வரர் பூஜை, மாலையில் தாமிர பரணியில் ஆரத்தி நடக்கிறது. திருநெல்வேலி ஜங்ஷன் கைலாசபுரம் தைப்பூச மண்டபத்திலும் ஆரத்தி நடக்கிறது.