காரைக்கால்: காரைக்கால் ஆற்றங்கரை விநாயகர் கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் மதகடி ஆற்றங்கரை விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பலவகையான திரவங்கள் அபிஷேகம் நடைபெறும். கந்தசஷ்டி இறுதி நாளான நேற்று ஆற்றங்கரை விநாயகர் கோவிலில் அம்பாளிடம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.பின் கோவில் எதிரே உள்ள வீதியில் முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் மூன்று முறை சுற்றி வந்து போர் புரிந்தார்.பின் முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்து மகா தீபாரதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதுபோல் திருநள்ளர் கோவில்.பார்வதீஸ்வரர் கோயில்.கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.