தூத்துக்குடி: "நந்தன தமிழ்ப்புத்தாண்டு துவக்கத்தையொட்டி, நேற்று திருச்செந்தூரில் சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.கோயில்நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 க்கு விஸ்வரூப தீபாராதனை, மற்ற காலங்கள் தொடர்ந்தன. காலை 7.40 க்கு அஸ்திரதேவர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணியளவில் மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்ததும், உற்சவர் சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.