பதிவு செய்த நாள்
06
நவ
2019
11:11
கோபி: கோபி பச்சமலை முருகன் கோவிலில், குரு பெயர்ச்சி மற்றும் 108 சங்காபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. காலை, 9:00 மணிக்கு, குரு பெயர்ச்சி கலச பூஜை, நவக்கிரஹ ஆவாஹனம், சிறப்பு பரிகார மகா ?ஹாமம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, குரு தட்சிணாமூர்த்தி, நவக்கிரக மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பரிகார அர்ச்சனை நடந்தது. கோபி, பச்சமலை, சீதாலட்சுமிபுரம், புதுப்பாளையம், மொடச்சூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், திரளாக கலந்து கொண்டனர்.