காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 28ம் தேதி துவங்கி, தினசரி சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. கடந்த 2ம் தேதி முருகர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக் கொண்டு ஆலயத்தையும் வந்தடைந்தனர். தொடர்ந்து முருகர்-வள்ளி தெய்வானை திருமணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.