பதிவு செய்த நாள்
06
நவ
2019
12:11
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, டிசம்பர் 25ம் தேதி துவங்குவதையொட்டி, முகூர்த்தக்கால் நடப்பட்டது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரங்கால் மண்டபம் அருகில், முகூர்த்தக்கால் நடப்பட்டது. டிச., 27ம் தேதி முதல், பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. ஜன., 6ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான, சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், உற்சவத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.