மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனுாரில் செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் ஏரிக்கரையில் அமைந்துள்ள செல்லியம்மனுக்கு கடந்த 9ந்தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விக்னேஷ்வரர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், முதற்கால யாக கால பூஜையுடன் பூர்ணாஹூதி தீபாரதனை முடிந்தது.தொடர்ந்து, நேற்று 10ம் தேதி காலை 6.30 மணிக்கு கோபூஜை, யாகசாலை பூஜை ஆரம்பித்து, 9 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாரதனை முடிந்து 9.30 மணிக்கு கடம் புறப்பட்டு 10.30 மணிக்கு செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.