பதிவு செய்த நாள்
11
நவ
2019
02:11
விழுப்புரம்:திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவி லில், நேற்று 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி காலை 10:00 மணிக்கு அகல்மஷ ஹோமம், வாஸ்து சாந்தி, மாலை 5:00 மணிக்கு பகவத் பிரார்த்தனை, அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, பூர்ணா ஹூதி நடந்தது.
தொடர்ந்து, 9ம் தேதி அக்னி கும்ப ஆராதனம், மகா சாந்தி ஹோமம், அஷ்டபந்தனம் சாற்று தல், திருமஞ்சனம், கடம் புறப்பாடு, மூர்த்தி ஹோமம் நடந்தது.
இதையடுத்து, நேற்று (நவம்., 10ல்) விஸ்வ ரூப தரிசனம், அக்னி கும்ப ஆராதனம், பூர்ணா ஹூதி, கடம் புறப்பாடு நடந்தது. பின், காலை 10:00 மணியளவில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மற்றும் சக்கரத்தாழ்வார், அனுமார் கோவில், ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், தும்பிக்கை ஆழ்வார் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.