இளையான்குடி: இளையான்குடி அருகேயுள்ள குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கடந்த 8ம் தேதி முதல் யாக சாலை பூஜை தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் (நவம்., 10ல்) யாக சாலை பூஜை நிறைவு பெற்று காலை கடம் புறப்பாடு நடந்தது, அதனைத் தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கோயிலை வலம் வந்த பின்னர் பெரியநாச்சி அம்மன் மூலவர் விமானக்கலசம், காசி விஸ்வநாதர் மூலவர் விமானக்கலசம் மற்றும் கோயில் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது, கோயில் முன் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி எஸ்.பி., தேவர் செய்திருந்தார்.