பதிவு செய்த நாள்
13
நவ
2019
12:11
விழுப்புரம்:விழுப்புரம் பிரஹந்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி மற்றும் அஸ்வனி நட்சத்திரத்தையொட்டி நேற்று (நவம்., 12ல்) மகா அன்னாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணியளவில் மூல வர் லிங்கத்திற்கு அன்னாபிஷேக அலங்காரம் நடந்தது. மூலவர் சன்னதி முழுவதும் வெண் டை, கத்தரி காய், பூசணி உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகளால் பந்தல் போன்று அலங் கரிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில், தீபாராதனை நடந்தது. திண்டிவனம் திண்டிவனம் அடுத்த தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஐப்பசி பவுர்ண மியை முன்னிட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு அன்னாபிஷே கம் மற்றும் 7:-30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விக்கிரவாண்டிபுவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் சுப்ரமணியர், புவனேஸ் வரர், புவனேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் மூலவர் புவனேஸ்வரருக்கு சாதம், காய்கறி, கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது.பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவிலில் பனங்காட்டீஸ்வரன், சத்தியாம்பிகை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் பனங் காட்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
* அவலூர்பேட்டை: அகத்தீஸ்வரர் கோவில், தேப்பிரம்பட்டு கிராமத்தில் உள்ள பெரியநாயகி உடனுறை கோகிலேஸ்வரர் கோவிலிலும், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று (நவம்., 12ல்) நடந்த அன்னாபிஷேகத்தில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா தனை நடந்தது.