பதிவு செய்த நாள்
13
நவ
2019
01:11
திருத்தணி:ரேணுகாதேவி கோவிலில் நடந்த மஹா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.திருத்தணி நகராட்சி, இந்திரா நகர் பகுதியில் உள்ள, ரேணுகாதேவி கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
இதற்காக கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து மூன்று கால யாக சாலை பூஜைகள் நடந்தன.நேற்றுமுன்தினம் (நவம்., 11ல்), காலை, 9:30 மணிக்கு, கோவில் மேல் உள்ள விமானத்தின் மீது, கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, கோவில் சன்னதியில் உள்ள விநாயகர், முருகர், கனக துர்க்கை அம்மன், நாகலிங்க சுவாமி மற்றும் நவகிரகங்கள் மற்றும் மூலவர் ரேணுகாதேவி அம்மனுக்கு கலசநீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.காலை, 10:30 மணிக்கு, மூலவருக்கு மஹா அபிஷேகம் நடந்தது.