பதிவு செய்த நாள்
13
நவ
2019
01:11
விழுப்புரம்:ராம்பாக்கம் கிராமத்தில் பட்டா பொது இடம் மற்றும் கோவில் இடத்தை ஆக்கிர மிப்பு செய்தவரிடமிருந்து மீட்டு தரக்கோரி, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ராம்பாக்கம் கிராம மக்கள், அளித்துள்ள மனு:ராம்பாக்கம் கிராமத்தில், காலனி பகுதியில் ஈஸ்வர் நகரை புதிதாக உருவாக்கி, தனி நபர்களுக்கு மனையாக விடப்பட்டது. அதன் உரிமையாளர், அங்குள்ள மெயின்ரோட்டின் அருகே உள்ள 10 அடி பட்டா இடம், பொதுமக்க ளுக்கு கொடுக்கப்பட்டது.அங்கு மாரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு 10 அடி பட்டா இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தை ராம்பாக்கத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் மற்றும் அவரது உறவினரும் ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் மனைக்கு எதிரே அளவிற்கு மீறி சிமெண்ட் காம்பவுன்ட் மற்றும் வீடு கட்டியுள்ளனர். இந்த இடத்தை அளந்து, பொது இடத்தை தனியாக அளவுகோல் போட்டு, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.இது தொடர்பாக ராம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டும், நடவடிக்கை இல்லை. கலெக்டர், இந்த கிராமத்தை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.