Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மனை மலர்களால் அர்ச்சனை செய்து ... ஞாயிறு என்றால் என்ன? ஞாயிறு என்றால் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
பொங்கல் வைக்கும் முறை
எழுத்தின் அளவு:
பொங்கல்  வைக்கும் முறை

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
01:01

பொங்கல் திருவிழா. கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளை பெறலாம். வீட்டு வாசலில் திருவிளக்கை,  ஒரு பலகையிட்டு அதன் மேல் வையுங்கள். பூ சூட்டுங்கள். காற்றடிக்கலாம் என்பதால் ஏற்ற வேண்டும் என்ற வசியமில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலை விரித்து, வலது ஓரத்தில் சாணப்பிள்ளையாரையும், செம்மண்ணை பிடித்து அம்பாளாக கருதி வையுங்கள். இலையில் பச்சரிசி, கிழங்கு, காய்கறி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் பல் சேர்த்து தயாரித்த காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்து கொள்ளுங்கள். ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி, அடுப்பில் வையுங்கள். தேங்காய் உடைத்து, அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள்.சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள்.  பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள். தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், குலவையிடுங்கள். குலவையிட தெரியாதவர் "பொங்கலோ பொங்கல் என்று உரக்க சொல்லலாம். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி  பொங்க இருக்கிறோமோ, அந்தளவுக்கு முகர்ந்து விட்டு பச்சரிசியை  இடுங்கள். நேரம் செல்லச் செல்ல எரிபொருளின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.பொங்கல் தயாரானதும் இறக்கி விடு ங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள்.

பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள். சூரியனுக்குரிய ஸ்லோகம், பாடல் பாடுங்கள். முதலில், பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து, காகத்துக்கு வைக்க வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு குடும்பத்தார் ஒற்றுமையுடன் சாப்பிட வேண்டும். இப்படி பொங்கலிட்டு வழிபட்டால் சூரியபகவானின்  அருளால் நலமுடன் வாழ்வீர்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar