அம்மனை குறிப்பிட்ட மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, சிறப்பான பலன்கள் கிடைக்கும். பாதிரிப்பூ கொண்டு அம்பாளை அர்ச்சித்து வழிபட்டால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்; பலாச மலர் கொண்டு அர்ச்சித்தால் அன்பு மிக்கவர்களின் நட்பு அதிகரிக்கும்; தாழம்பூவால் அர்ச்சனை செய்து வணங்கினால் உயர்பதவி மற்றும் பெருமைகள் வந்தடையும்; மாதுளம்பூ கொண்டு அர்ச்சித்தால் அம்பாளின் கருணையைப் பெறலாம்; தாமரைப்பூவால் அர்ச்சனை செய்து வழிபட்டால் பகைவர் தொல்லை நீங்கும்.