சிறப்பு மலர் · பகுதி 1 · பக்கம் 27 · 12 / 159
விநாயகரின் அறுபடை வீடு
மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்க மன்னர் இந்த விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தார். அங்குள்ள திருவாட்சி விளக்கு நாயக்க மன்னரால் செய்விக்கப் பெற்றது. ஒரே கல்லால் ஆன இந்த விக்ரகத்தின் உயரம் 7 அடி. விநாயகர் பெருமானின் பெரிய திருவுருவத்திற்கு ஏற்ப, விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி (முக்குறுணி) அரிசியில் கொழுக்கட்டை படைக்கப்படுவதால் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்படுகிறார். திருமலை நாயக்க மன்னரின் உருவம் திருவாட்சியில் உள்ளது. கோயிலைச் சுற்றி 16 விநாயகர்கள் இருக்கின்றனர். இவர்களிடம் வேண்டிக்கொள்ள பதினாறு செல்வமும் கிடைக்கும். திருநீறு விநாயகர், முக்குறுணி விநாயகர், திருமலை விநாயகர் (அம்பாள் சன்னதி முன்மண்டபம்), கூத்து விநாயகர் (அம்பாள் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் உள்ள இரட்டை விநாயகர்), மேற்கு ஆடி வீதியிலுள்ள சுந்தர விநாயகர், இம்மையிலும் நன்மை தரும் விநாயகர், கிழக்கு ஆடி வீதியில் வன்னி விநாயகர் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர். பொற்றாமரைக்குளத்தின் மேற்கு கரையில் கிளிக்கூட்டு மண்டபத்திலுள்ள சித்தி விநாயகர், விநாயகருக்கான அறுபடை வீடுகளில் ஒன்றாகும்.