மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 1 · பக்கம் 27 · 13 / 159

வைகைக்காக ஒரு நாடகம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின் போது, குண்டோதரனுக்கு முதலில் திருமண விருந்து படைக்கப்படுகிறது. அதன் பிறகே பக்தர்களுக்கு விருந்து பரிமாறும் நிகழ்ச்சி நடக்கிறது. மீனாட்சியின் திருமணத்திற்கு விருந்து படைத்த போது, பெண்வீட்டார் அறுசுவை விருந்து மிஞ்சி விட்டது என பெருமை பேசவே, குண்டோதரனை விருந்து சாப்பிட வைத்து அவர்களது ஆணவத்தை அடக்கினார் சிவன். இதன் அடிப்படையில் குண்டோதரனுக்கு முதலில் விருந்து படைக்கப்படுகிறது. கிழக்கு ஆடிவீதியில் பழைய திருமண மண்டபத்தில் குண்டோதரன் சிலை இருக்கிறது. அருகில் ஒரு பூதகணமும் உள்ளது. மதுரை மக்கள் தாகமின்றி நீர் அருந்த வைகை நதியைப் படைப்பதற்காக அவர் இந்த நாடகத்தை ஆடினார்.

விளம்பரம்
மேலே
விளம்பரம்