மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 29 · 23 / 159

கோயில் நகரத்தில் ‘கொண்டாட்டம்’

  • சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தலம்.
  • மூவேந்தர் போற்றிய புண்ணியத் தலம்.
  • பாண்டிய மன்னர்களின் தலைநகராக இருந்த தலம்.
  • மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்புகளை பெற்ற தலம்.
  • சைவத்திற்கும் வைணவத்திற்கும் பாலமாக இருக்கும் தலம்.
  • மாணிக்கவாசகருக்காக சிவபெருமானே கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்த தலம்.
  • பன்னிரு திருமுறைகளால் பாடப் பெற்ற தலம்.
  • சிவபெருமானே 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம்.
  • ஆன்மிகத்தின் மையமாக இருப்பதால் கோயில் நகரம் என அழைக்கப்படும் தலம். இன்னும் பல்வேறு சிறப்பு மிக்க இத்தலத்தின் கும்பாபிஷேகம் முன்னிட்டு மீனாட்சி அம்மனின் சிறப்புகள், பூஜை முறைகள், திருவிழாக்கள், கலை, இலக்கியம், புராணம், கல்வெட்டு, ஓவியங்கள், வாசகர்களின் அனுபவங்கள் குறித்த செய்திகள் இங்கு இடம் பெற்றுள்ளன. அனைவருக்கும் அன்னை மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருவருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
விளம்பரம்
மேலே
விளம்பரம்