சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 42 · 76 / 159
கோபுரங்கள்
- மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு ராஜ கோபுரம் 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பல திருப்பணிகளைக் கண்டுள்ளது. நான்காம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1303 – 1325) காலத்தில் இது திருப்பணி செய்து திருத்திக் கட்டப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் முறையில் கிழக்கு கோபுரத்தின் உட்புறச் சுவரில் அவனி வேந்தராமன் திருக்கோபுரம் சுந்தர பாண்டியன் திருக்கோபுரம் என்று தெரிவிக்கும் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளன.
- மேற்கு ராஜகோபுரம் பாரக்கிரம பாண்டியனால் 1315 – 1334ல் கட்டப்பட்டது. இதைத் தெரிவிக்கும் அவன் புகழ்பாடும் பாடல் கல்வெட்டுகள் கோபுரத்தின் உட்புறச் சுவரில் காணப்படுகிறது.