மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 1 · பக்கம் 25 · 8 / 159

மீனாட்சியின் வைர மூக்குத்தி தரிசனம்

  • மதுரையில் மீனாட்சியின் வைர மூக்குத்தி தரிசனம் விசேஷமானது. இவளை வைர கிரீடம் அணிந்த அலங்காரத்தில் சித்திரைப்பிறப்பு, ஆங்கிலப்புத்தாண்டு, தை அமாவாசை ஆகிய நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும்.
  • மீனாட்சி சன்னதி எதிரிலுள்ள கோபுரம் அதிக சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்ததால் ‘சித்திர கோபுரம்’ என்ற பெயர் உண்டு. இக்கோபுரத்திலுள்ள 25 முகம் கொண்ட சிவன் சிற்பம் அவசியம் காண வேண்டியது. இதனை மேற்கு கரையிலுள்ள துலாபார தூண் அருகில் நின்று பார்க்கலாம்.
  • அம்மன் சன்னதி எதிரில் கிளிக்கூட்டு மண்டப தூண்களில் அர்ஜுனன், கர்ணன், பீமன், நகுலன், சகாதேவன், வாலி சிற்பங்கள் உள்ளன.
விளம்பரம்
மேலே
விளம்பரம்