Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னை மீனாட்சி தாயே... நீயே துணை மஹாபாரதத்துடன் தொடர்புடையது ஷெட்டிஹள்ளி ஆஞ்சநேயர் கோவில் மஹாபாரதத்துடன் தொடர்புடையது ...
முதல் பக்கம் » துளிகள்
எப்போதும் திருவிழா காணும் பாண்டிய நாட்டில் பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எப்போதும் திருவிழா காணும் பாண்டிய நாட்டில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

17 செப்
2026
09:09

மீன் போல துாங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்கவைக்கும் அழகன் என்பதால் சிவனுக்கு ‘சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்’ என்றும் சிறப்புப் பெயர் உண்டானது.
மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை தம்பதிக்குக் குழந்தை இல்லை. குறையைப் போக்க புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். அதில் பார்வதியே குழந்தையாக மூன்று தனங்களுடன் அவதரித்தாள்.
‘தடாதகை’ என்று பெயரிட்டு வளர்த்தனர். மகளுக்குப் போர்ப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார் மன்னர். பருவ வயதை அடைந்ததும் பாண்டிய நாட்டின் இளவரசியாக அறிவித்து மகளுக்குப் பட்டாபிஷேகம் நடத்தினார்.
தடாதகை எண்திசைக் காவலர்களிடம் திக்கு விஜயமாகப் போருக்குச் சென்று வெற்றி பெற்றாள். இறுதியில் வடக்குத் திசை நோக்கிச் சென்று கைலாயத்தை அடைந்தாள். நந்திகேஸ்வரரைத் தோற்கடித்து சிவபெருமானுடன் மோத தயாரானாள். ஆனால் அவரைக் கண்டதும் தடாதகை நாணத்தால் முகம் சிவக்க, மூன்றாவது தனம் மறைந்தது.
‘இவரே உன் மணவாளன்’ என அப்போது வானில் அசரீரி ஒலித்தது. அதன்படி பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் சிவபெருமானின் தலைமையில் ஒன்று கூடினர். மதுரையில் சிவபார்வதி திருமணம் கோலாகலமாக நடந்தது. அன்று முதல் தெய்வத் தம்பதியரின் ஆட்சி மதுரையில் தொடங்கியது. மீன் போல துாங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்க வைக்கும் அழகன் என்பதால் சிவனுக்கு ‘சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்’ என்றும் சிறப்புப் பெயர் உண்டானது.
விருத்திராசுனைக் கொன்ற பாவம் தீர இந்திரன் சிவத்தலங்களுக்கு யாத்திரை புறப்பட்டார். கடம்ப வனமாக இருந்த மதுரையில் சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தைப் வழிபட பாவம் நீங்கியது. எட்டுத் திக்கும் யானைகள் சுமக்கும் விதத்தில் பெரிய விமானம் அமைத்து கோயில் கட்டி இந்திரன் பூஜித்தார். வியாபாரத்திற்காக கடம்ப வனம் வழியாக வந்த தனஞ்ஜெயன் என்னும் வணிகர் கடம்ப வனத்தில் இருந்த கோயிலைக் கண்டு அதிசயித்தார். விஷயம் அறிந்த குலசேகரப் பாண்டியன் கோயிலைச் சுற்றி மதுரை நகரை உருவாக்கி கோயிலுக்குத் திருப்பணி செய்தார்.

எப்போதும் திருவிழா

கோயில்களில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பிரம்மோற்ஸவம் என்னும் பெரிய திருவிழா நடக்கும். ஆனால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 12 மாதமும் பெரிய திருவிழா நடக்கிறது.
சித்திரை பிரம்மோற்ஸவம், ஆடி முளைக்கொட்டு உற்ஸவம், ஆவணி பிட்டுத்திருவிழா, கார்த்திகை தீபத்திருவிழா, தை தெப்பம், மாசி மண்டல உற்ஸவம் என ஆறு விழாக்களுக்கு கொடியேற்றப்படுகிறது.
இதில் முளைக்கொட்டு விழா அம்பாளுக்கு நடப்பதால் இவ்விழாவிற்கு மட்டும் அம்பாள் சன்னதி முன்பு கொடியேற்றம் நடக்கிறது. வைகாசி வசந்த உற்ஸவம், ஆனி ஊஞ்சல் உற்ஸவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கோலாட்டம், மார்கழியில் மாணிக்கவாசகர் உற்ஸவம், அம்பாளுக்கு எண்ணெய் காப்பு விழா மற்றும் பங்குனி பவித்ரோத்ஸவம் ஆகிய 6 விழாக்களுக்கு காப்பு கட்டி விழா துவங்குகிறது.

மாணவர்களுக்கான கோயில்

நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும். ஜாதகத்தில் புதன் திசை நடப்பவர்கள், இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். புதன் கிழமைகளில் காலை 6:00 – 7:00 மணிக்குள் சிவனுக்கும், அம்பிகைக்கும் பச்சை பட்டு வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு நைவேத்யம் செய்தால் கல்வியில் சிறக்கலாம். நைவேத்யத்தை கோயிலில்தான் தயாரிக்க வேண்டும். வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. சுமாராக படிக்கும் மாணவர்களுக்காகவே மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் இங்கு அருள்புரிகின்றனர்.

கடம்பவனம்

மதுரை முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. பின்னர் சிவபெருமான் கட்டளையின் பேரில் குலசேகர பாண்டியன் காட்டைத் திருத்தி நாடாக்கினான். அதற்கு அடையாளமாக கடம்பமரம் இத்தல விருட்சமாக உள்ளதையும், கோயில் வடக்கு சுற்றில் ஒரு கடம்ப மரம் இருப்பதையும் காணலாம். மேலும் இத்தல இலக்கியங்களில் கடம்ப வனம் என்றே குறிக்கப் பெறுகின்றது.

நான்மாடக்கூடல்


ஒருசமயம் மதுரையை அழிக்க வருணன் ஏழு மேகக் கூட்டங்களை ஏவினான். அதை தடுக்குமாறு சிவபெருமான் தம் சடையில் இருந்த நான்கு மேகங்களுக்கும் கட்டளையிட்டார். உடனே அவை நான்கு மாடங்களாகக் கூடி மதுரை நகரை காத்தது. இதனால் இத்தலம் நான்மாடக்கூடல் எனப்பெயர் ஏற்பட்டது.

அழகோ அழகு!

* சிவபெருமான் திருநடனம் செய்யும் தலங்கள் ஐந்து. அவை சபைகள் எனப்படும் எனவே தான் சிவபெருமானை சபா நாயகர் என்று அழைக்கின்றனர். பஞ்ச சபைகளில் மதுரை என்பது வெள்ளியம்பலம். இது ரஜத சபை என அழைக்கப்படுகிறது.  
* ராஜசேகர பாண்டிய மன்னனுக்காக கால் மாறி நடனமாடிய நடராஜர் இங்கு இருக்கிறார்.  
* நாம் சொல்வதை அப்படியே சொல்லும் தன்மையுடையது கிளி. இது மீனாட்சியின் காதோரம் இருந்து, நமது வேண்டுதலை எல்லாம் கேட்டுக் மீனாட்சி அம்மனிடம் கூறுகிறது.
* நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக் காத்திருக்கும் பாவனையில், அன்னை மீனாட்சியின் திருச் சிலையில் வலது பாதம் சற்று முன்நோக்கி இருக்கிறது.
* அஷ்ட சக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம், கம்பத்தடி மண்டபம், நுாற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வீரவசந்தராயர் மண்டபம், திருக்கல்யாண மண்டபம் சிறப்பு மிக்கவை.
* மீனாட்சியின் திருக்கல்யாணம் முன்பு திருக்கல்யாண மண்டபத்தில்தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது பக்தர்கள் அனைவரும் பார்க்க வசதியாக மேற்கு வடக்கு ஆடி வீதிகள் சந்திப்பில் நடக்கிறது.
* உயிர்கள் உய்யும் பொருட்டு சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய இடம் மதுரை. இவற்றை விளக்கக் கோயிலின் பல பகுதிகளில் சிற்பங்கள், ஓவியங்கள், புடைச் சிற்பங்கள், சுதைச் சிற்பங்கள் உள்ளன.
* மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்பினை உடையது மதுரை.
* தலமரம்: கடம்ப மரம், வில்வ மரம்
* முற்காலத்தில் கடம்ப வனமாக இருந்த இப்பகுதிதான் தற்போது மதுரை என அழைக்கப்படுகிறது.
* இங்குள்ள பொற்றாமரைக்குளம் பல சிறப்புக்களை உடையது.
* இதுவே நாரை முக்தி பெற்ற குளம். நாரையின் வேண்டுகோளுக்கு இணங்க இக்குளத்தில் மீன்கள் இல்லை.
* இத்தலத்திற்கு மதுரை, ஆலவாய், நான்மாடக் கூடல் என பல பெயர் உண்டு.  
* கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம் என்பதற்கு ஏற்ப, இக்கோயிலில் பன்னிரெண்டு கோபுரங்களும், இரண்டு விமானங்களும் உள்ளன.
* நான்கு திசைகளில் நான்கு ராஜ கோபுரங்கள், சித்திர கோபுரம், ஐந்து நிலை அம்மன் சன்னதி நுழைவுக் கோபுரம், கடகக் கோபுரம், நடுக்காட்டுக்கோபுரம். பலகக் கோபுரம். இடபக் குறியிட்ட கோபுரம் அல்லது சின்ன மொட்டைக் கோபுரம். அம்மன் சன்னதி,  சுவாமி சன்னதி மூன்று நிலைக் கோபுரங்கள் என பன்னிரண்டு நிலைக் கோபுரங்கள் உள்ளன.
* சுவாமி சன்னதியில் இந்திர விமானம் அல்லது விண்ணிழி விமானம்
* அம்மன் சன்னதியில் விமானம் உள்ளன.  இரண்டு விமானங்களும் தங்க விமானங்களாக ஒளி வீசுகின்றன.  
* சித்தி விநாயகர் (தல விநாயகர்), முக்குறுணி விநாயகர் சிறப்புடையவர்கள்.
* ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெறும். சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத்திருவிழா, தெப்பத்திருவிழா சிறப்பானவை. இத்திருவிழாக்களில் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
* கம்பத்தடி மண்டபம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மீனாட்சி திருக்கல்யாண சிற்பம் இங்கு தான் உள்ளது.
* தடாதகை (மீனாட்சி) – சொக்கநாதர் திருமணம் முடிந்த நிலையில் தன்னைத்தானே வழிபட அமைத்த திருத்தலம் நடுவூர். அதுவே இன்று மேல மாசி வீதியில் அமைந்துள்ள இம்மையில் நன்மை தருவார் கோயில்.
* சித்திரக் கோபுரத்தின் சிறப்பு: சதா சிவ மூர்த்தி, பன்னிரெண்டு திருமுகங்களுடனான முருகப் பெருமான், பஞ்சமுக லிங்கம், பஞ்சமுக விநாயகர் ஆகியோர் திருவடிவங்கள் அடங்கிய சுதை சிற்பங்கள் உள்ளன.
* சோமசுந்தரப் பெருமான் கருவறையில் சுயம்பு லிங்கத்தின் அருகில் மனோண்மணி  என்னும் பெயரில் அமைந்த அம்மன் சிலை, பிறர் பார்வையில் படாதவாறு உள்ளது. சிவனை விட்டு நீங்காமல் நிறைந்திருப்பது சக்தி எனும் தத்துவத்தை விளக்குகிறது இவ்வமைப்பு முறை.சங்கப்புலவர் சன்னதி இங்குள்ளது.
* செங்கோல் பெறும் விழா நடைபெறும் இடமே ஆறுகால் மண்டபம். சித்திரை மாதம் மீனாட்சி அம்மன் செங்கோல் பெறும் நிகழ்ச்சியும், ஆவணி மாதம் சொக்கநாதர் செங்கோல் பெறும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

ஸ்ரீசக்கர அமைப்பு

மதுரை நகரம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலை மையமாக வைத்து உருவானது. தாமரை மலர் போல வடிக்கப்பட்ட இந்த நகரத்தின் மத்தியில் கோயிலும், சுற்றியுள்ள இதழ்களாக தெருக்களும் அமைந்திருப்பதாக சொல்வர்.
இங்கு வந்த ஆதிசங்கரர், மீனாட்சி சன்னதியில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து பஞ்சரத்னம் பாடினார். அதில் மதுரையை, ‘ஸ்ரீசக்கர அமைப்பில் அமைந்த நகரம்’ என குறிப்பிட்டு பாடியிருக்கிறார்.
இதை, ‘ஸ்ரீசக்ராங்கித பிந்துமத்ய வஸதீம்’ என்ற ஸ்லோகத்தின் மூலம் அறியலாம். ‘சக்கரத்தின் மத்தியில் அம்பிகை (பிந்து) வசிக்கிறாள்’ என்பது இதன் பொருள். ஆன்மிகத்தில் பிந்து என்ற சொல் அம்பிகையையும், நாதம் என்ற சொல் என்பது சுவாமியையும் குறிக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 
temple news
* கடவுளை வணங்கு. நல்ல காலம் பிறக்கும்.  * பிறர் செய்யும் தவறுகளை நினைத்து வருந்தாதே. * இளமையிலேயே ... மேலும்
 
temple news
* ஒழுக்கமாக வாழ். அதுவே உன்னை முன்னேற்றும். * தன் நலத்தோடு, பிறர் நலத்தையும் விரும்புபவன் உத்தமன்.  * ... மேலும்
 
temple news
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் அருகிலுள்ள தம்பரஹள்ளியில் உள்ள மலை மீது, பண்டி ரங்கநாதசுவாமி கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar