Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆபரண சேர்க்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆபரண சேர்க்கை

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:11

இந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரையும், புதன் டிச.2 வரையும் நற்பலன் தருவர். சனி,கேது ஆகியோராலும் நன்மை தொடரும். மனதில் பக்தி எண்ணம் மேலிடும்.  எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிரிகளின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.  

கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். டிச.2க்குப் பிறகு கணவன், மனைவி இடையே மனக்கசப்புகள் வரலாம் அனுசரித்து போவது நல்லது.  பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் எடுப்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர். டிச.2 க்குப் பிறகு அக்கம் பக்கத்தினர் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியதிருக்கும். மற்றவர் உதவியை எதிர்பார்க்காமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். உடல் நிலை அதிருப்தியளிக்கலாம். செவ்வாயால் தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்

தொழிலதிபர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றியுடன் செயல்படுவர்.
வியாபாரிகள் ஆதாயம் காண்பர். குறிப்பாக ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ஐ.டி.,துறையினர் உன்னத நிலையில் இருப்பர். அதிகாரிகளின் ஒத்துழைப்பால் வளர்ச்சியடைவீர்கள்.  
மருத்துவர்களுக்கு வேலைப்பளு குறையும்.  
வக்கீல்கள் எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவர்.
அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்புகழ் பெறுவர்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
விவசாயிகள் பாசிப்பயறு, நெல், எள், கொள்ளு, சோளம், பழவகைகள் மூலம் அதிக லாபம் கிடைக்கப் பெறுவர்.  
பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர்.  போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.

சுமாரான பலன்கள்:

தொழிலதிபர்களுக்கு டிச.2க்குப் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பயணத்தால் உடல்நலக்குறைவு ஏற்படலாம்.
வியாபாரிகளுக்கு மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறு வரலாம்.  
அரசுப் பணியில் இருப்பவர்கள் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது நல்லது.  
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் டிச.2 க்குப் பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரியலாம்.
வக்கீல்கள் டிச. 2 க்குப் பிறகு வழக்கு விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்
ஆசிரியர்கள் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாவர்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் கூடுதல் கவனமுடன் இருக்கவும்.     
அரசியல்வாதிகள் சிலர் தீயோர் சேர்க்கையால் அவப்பெயருக்கு ஆளாகலாம் கவனம்.
கலைஞர்களுக்கு நவ.22க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
விவசாயிகள் புதிய சொத்து வாங்க ஏற்ற காலகட்டம் இது இல்லை.
பள்ளி மாணவர்கள் டிச.2க்குப் பிறகு சிரமப்பட வேண்டியதிருக்கும்.
கல்லூரி மாணவர்கள் சிலர் உடல்சோர்வு, மனத்தளர்ச்சியால் அவதிப்படலாம்.

* நல்ல நாள்: நவ.18,19,22, 23,28,29,30, டிச.1,2, 8,9,10,11,12,15,16
* கவன நாள்: டிச.3,4,5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,7  
* நிறம்: பச்சை, கருப்பு

* பரிகாரம்:
●  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
●  வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை
●  செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar