பதிவு செய்த நாள்
18
நவ
2019
02:11
பந்தலார்:வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில், நடந்த வயநாடன் செட்டி சங்கமம் நிகழ்ச் சியில் திரளான மக்கள் பங்கேற்றனர்.கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் வரவேற்றார்.வயநாடன் செட்டி சமுதாய தலைவர் கேசவன் செட்டி தலைமை வகித்து பேசுகையில், ”பண்டைய காலம் முதல் வயநாடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் குடியி ருந்து வரும், வயநாடன்செட்டி சமூகத்தினர், ஒன்றுகூடி ஐப்பசி மாதம், 30 நாள் விருசிக சங்கமம் தின விழா நடத்துகிறோம்.
”இதில் ஊர்வலம், கலாசார நிகழ்ச்சிகள், மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான கூட்டம் நடத்தப்
படுகிறது. மக்கள் அனைவரும் விவசாயத்தில் செழிப்பு பெறவும், ஒற்றுமையுடன் வாழவும் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்கிறோம்,” என்றார்.தொடர்ந்து நடந்த ஊர்வலத்தை பத்தேரி நகராட்சி தலைவர் சாபு துவக்கி வைத்து பேசுகையில், ”வயநாட்டின் விவசாயம் செட்டி சமுதாய மக்கள் கையில்தான் உள்ளது. ஆகவே விவசாயத்தின் வளர்ச்சிக்காக தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் இந்த சமூகத்தினர் மேலும் வளர்ச்சி காண வேண்டும்,” என்றார்.
தொடர்ந்து, ஊர்வலம் சுங்கம் வரை சென்று கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கு செட்டி சமுதாய குடும்பத்தினர் விவசாயம் செய்து கொண்டு வந்த அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்கள், காணிக்கையாக வழங்கி, உணவு சமைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், எருமாடு சிவன் கோவில்,ஐயங்கொல்லி, வாளாடு,பொன்னானி மகா விஷ்ணு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நாளின் முக்கிய நிகழ்வாக, இளைஞர்களுக்கு, பெண் பார்க்கும் படலமும் நடந்தது.தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு, 101 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செய்யப்பட்டது. பின், அனைவரும் கலைந்து சென்றனர். நிகழ்ச்சியில், வயநாடன் செட்டி, தமிழ்நாடு பிரிவு தலைவர் ஸ்ரீதரன், நிர்வாகிகள் வாசு, ஜெயச்சந்திரன், வேணுகோபால் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.