பதிவு செய்த நாள்
18
நவ
2019
03:11
வீரபாண்டி: விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, வெள்ளையகவுண்டனூரிலுள்ள, செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் 16ல் தொடங்கியது.
இரவு, அஷ்டபந்தன மருந்து சார்த்தி, மூலவர், நவக்கிரக சிலைகள் பிரதிஷ்டை செய்து கண் திறக்கப்பட்டன. நேற்று 17ல் காலை, 6:00 மணிக்கு பூர்ணாஹூதியுடன் யாகபூஜை நிறைவடை ந்து, மங்கல வாத்தியம் முழங்க, யாகத்தில் வைத்து பூஜித்த புனிதநீர் கலசங்களை சுமநத்து, சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து, 7:30 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு ஊற்றி, கும்பாபி ?ஷகத்தை நடத்தி வைத்தனர். அப்போது, கூடியிருந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. 8:00 மணிக்கு, மூலவர் செல்வ விநாயகர், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீரூற்றி அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின், அன்னதானம் வழங்கப்பட்டது.