காளஹஸ்தியில் உள்ள சிவன் காளத்திநாதர். இவரது கண்ணில் ரத்தம் வழிந்தது கண்ட கண்ணப்பர், தன் வலக்கண்ணை அகழ்ந்து அப்பினார். பின் இடக்கண்ணிலும் ரத்தம் வழிய, தன் இடக்கண்ணையும் அகழ்ந்து எடுக்க முயற்சித்தார். ஆனால், லிங்கத்தின் இடப்பாகத்தில் இருந்து ஒரு கை முளைத்தது. நில்லு கண்ணப்பா! என்று அசரீரி ஒலித்து அவரை தடுத்தது. இதற்கு காரணம் என்ன தெரியுமா... சிவனின் இடப்பாகம் பார்வதிக்கு உரியது. பக்தரின் துன்பம் காண தாயான பார்வதியின் மனம் விரும்பவில்லை. அதனால் அவரை தடுத்தாள்.