பதிவு செய்த நாள்
18
ஏப்
2012
11:04
திருநெல்வேலி:செங்கோட்டை நித்திய கல்யாணி அம்பாள் கோயிலில் கொடை விழா துவங்கியது.செங்கோட்டை நித்திய கல்யாணி அம்பாள் கோயிலில் நேற்று கொடை விழா துவங்கியது. காலையில் கால்நாட்டு விழா, சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் அம்பாள் ராஜராஜேஸ்வரி அல்ஙகாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பேராசிரியை வேலம்மாள் முத்தையாவின் சிறப்பு சொற்பொழிவும், இரவு அலங்கார தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இன்று (18ம் தேதி) முதல் 22ம் தேதி வரை காலையில் அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சிறப்பு அலங்காரம், சிறப்பு சொற்பொழிவு, இரவு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 23ம் தேதி காலையில் பிஷேகம், தீபாராதனை, மாலையில் மாக்காப்பு அலங்காரம், கும்மிப்பாட்டு, கோலாட்டம், இரவு குற்றாலம் தீர்த்தம் கொண்டு வருதல், குடியழைப்பு நடக்கிறது. 24ம் தேதி காலையில் வீரகேரள விநாயகர் கோயிலில் இருந்து நித்திய கல்யாணி அம்பாள் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வருதல், குங்குமம் அபிஷேகம், மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் பொங்கலிடுதல், முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம், சந்தன காப்பு அலங்கார தீபாராதனை, இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருதல் நடக்கிறது.வரும் 25ம் தேதி காலையில் அபிஷேகம், அலங்கார சிபற்பு தீபாராதனை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் கொடை விழா நாட்களில் சிறப்பு நாதஸ்வரம், மேளம், கரகாட்டம், செண்டை மேளம், வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.