போடி: போடி அருகே ஆறுமுகநாயனார் கோயில் தீர்த்த சுனை நீர் தொட்டியில் மழையால் தண்ணீர் மாசடைந்து குளம் போல தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் நீராட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
போடி ஊராட்சி ஒன்றியம் கோடாங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட போடி - தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயில். ஆண்டு தோறும் சித்திரை முதல் தேதியில் திருவிழா நடக்கும்.
எப்போதும் வற்றாத நிலையில் மூலிகை கலந்து சுனை நீர் வரும் வகையில் தொட்டி அமைந் துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனை நீரில் நீராடுவர். இதோடு முருகன், ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலையணிய நீராடி செல்வதற்கும் புனித இடமாகும்.
இந்நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் சுனை நீர் அமைந்துள்ள தொட்டி பகுதியில் மண்கழிவுகள் தண்ணீர் மாசடைந்து செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் நீராட சிரமப்படும் நிலையில், சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. தொட்டியை சுத்தப் படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.