விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சுவாமி உள் புறப்பாடு நடந்தது.விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, மாலை 6:00 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், உற்சவர் சுவாமி, அம்பாளுடன் கோவில் உள்புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.