பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா மறைந்த அன்று, பெங்களூரூவில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம், பாபா, அதை துவக்கி வைப்பதாக இருந்தார். ஈஸ்வரம்மா மறைந்து விட்டதால், பாபா வரமாட்டார் என்றே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதினர். ஆனால், சாய்பாபா நிகழ்ச்சி துவங்க இருந்த காலை 9 மணிக்கு சரியாக வந்து சேர்ந்தார். அதற்கு முன்னதாக, ஈஸ்வரம்மாவின் உடலை புட்டபர்த்திக்கு அனுப்பி விட்டார். மாணவர்கள் மத்தியில் மிக சகஜமாக புன்முறுவலுடன் பேசினார். எல்லோரும் இதுகண்டு மிகுந்த ஆச்சரியமடைந்தனர்.எந்தச் சூழலிலும் கலங்காத உள்ளம், சமநிலை தவறாமை ஆகியவற்றை இதன்மூலம் அவர் வெளிப்படுத்தினார்.