கார்த்திகை 12 விளக்கு நிறைவு: பக்தர்கள் வருகை அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2019 10:11
சபரிமலை :கேரளாவில் கார்த்திகை 12 விளக்கு நேற்று கொண்டாடப்பட்டது. இன்று முதல் சபரிமலைக்கு கேரள பக்தர்கள் வருகை அதிகரிக்கும்.
கேரளாவில் கார்த்திகை 12ம் நாள் வரை வெளியூர் பயணம் செல்வதில்லை. 12ம் நாள் விளக்கு ஏற்றி விழா நிறைவு பெற்றபின் சபரிமலை உட்பட புனித பயணம் புறப்படுவர்.நேற்று 12 விளக்கு நிறைவு பெற்றதால் இன்று முதல் சபரிமலைக்கு கேரள பக்தர்கள் வருகை அதிகரிக்கும். கடந்த இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருப்பு குறைவாகவே உள்ளது. நெய் அபிஷேகத்துக்கும் நீண்ட வரிசை இல்லை.நேற்று டிரம்ஸ் சிவமணி இருமுடி கட்டுடன் சபரிமலை வந்து தரிசனம் நடத்திய பின்னர் ஆடிட்டோரியத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.பத்தணந்திட்டை பஸ் ஸ்டாண்டில் மாவட்ட போலீஸ் துறை சார்பில் இலவச முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் வருபவர்கள் இங்கு முன்பதிவு செய்து சபரிமலை பயணத்தை தொடரலாம்.